முகப்பு
செய்திகள்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ரோஹித் சர்மா, மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட ஐந்து பேர் பரிந்துரை

ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா, வினேஷ் போகத், மாரியப்பன் தங்கவேலு....

செய்திகள்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ரோஹித் சர்மா, மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட ஐந்து பேர் பரிந்துரை

ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா, வினேஷ் போகத், மாரியப்பன் தங்கவேலு....

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா, வினேஷ் போகத், மாரியப்பன் தங்கவேலு, மனிகா பாத்ரா, ராணி ராம்பால் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களைப் பரிந்துரைத்தன.

இந்நிலையில் தேசிய விருதுக் குழுவினர் இன்று தில்லியில் கூடினார்கள். கூட்டத்தின் முடிவில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2016 ரியோ பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பாத்ரா, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோரின் பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →