ஜனவரியில் குழந்தை: விராட் கோலி பூரிப்பு
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
செய்திகள்ஜனவரியில் குழந்தை: விராட் கோலி பூரிப்பு
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்நிலையில் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை விராட் கோலி வெளியிட்டுள்ளார். இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021-ல் பிறக்கப் போகிறது என்று ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தானும் அனுஷ்கா சர்மாவும் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் விராட் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இன்ஸ்டகிராம் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குச் சமீபத்தில் பதில் அளித்தார் அனுஷ்கா சர்மா. சந்தோஷமான திருமண வாழ்க்கைக்குக் காரணம் என்ன என்கிற கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு அனுஷ்கா சர்மா பதில் அளித்ததாவது:
நம்பிக்கை. காதல் என்பது இருவருக்கும் இடையிலான அன்பை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் நல்ல உறவு என்பது கடமையை உணர்தல் ஆகும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் நல்ல புரிதல்கள் உண்டாகும். இதன்மூலம் சிறந்த மனிதராக நாம் மாற முடியும் என்று கூறினார்.