டி20யிலும் நடராஜன் அறிமுகம்: முதல் ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங்
3-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், டி20யிலும் அறிமுகமாகியுள்ளார்...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கான்பெராவில் இன்று நடைபெறுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்தியா, டி20 தொடரைக் கைப்பற்றுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
3-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், டி20யிலும் அறிமுகமாகியுள்ளார். இந்திய அணி தொப்பியை நடராஜனிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வழங்கினார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ராகுல், தவன், கோலி, மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், ஷமி, நடராஜன் போன்றோர் விளையாடுகிறார்கள். பும்ரா, சஹால் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.