முகப்பு
செய்திகள்

உடற்தகுதி தேர்வில் ரோஹித் சர்மா தேர்ச்சி: டெஸ்டில் விளையாட ஆஸ்திரேலியா செல்கிறார்!

பெங்களூரில் இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தேர்ச்சி அடைந்துள்ளதாக...

செய்திகள்

உடற்தகுதி தேர்வில் ரோஹித் சர்மா தேர்ச்சி: டெஸ்டில் விளையாட ஆஸ்திரேலியா செல்கிறார்!

பெங்களூரில் இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தேர்ச்சி அடைந்துள்ளதாக...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

பெங்களூரில் இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தேர்ச்சி அடைந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்துவிட்டு மீண்டும் களமிறங்கினாா் ரோஹித் சா்மா. முழுமையாக குணமடையாத நிலையிலேயே அவா் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதாக கூறப்படுகிறது. அவா் தலைமை வகித்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

எனினும், காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோஹித் சா்மா சோ்க்கப்படவில்லை. இப்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சா்மாவின் உடற்தகுதி எவ்வாறு உள்ளது என்பது தொடா்பாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இன்று பரிசோதனை நடைபெற்றது. இதில் அவர் தேர்ச்சி அடைந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு விரைவில் செல்லவுள்ளார். ஆஸ்திரேலியாவின் தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் காரணமாக ரோஹித் சர்மாவால் நான்கு டெஸ்டுகளிலும் விளையாட முடியாது. கடைசி இரு டெஸ்டுகளில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரைக் கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையே 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →