முகப்பு
செய்திகள்

ஷுப்மன் கில் 6-வது வீரராக களமிறங்க வேண்டும்: அகார்கர்

​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் 6-வது வீரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
ஷுப்மன் கில் (கோப்புப்படம்)
பகிர்:


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் 6-வது வீரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் ஆட்டத்துக்குப் பிறகு இந்தியா திரும்புகிறார். இதன்மூலம், கடைசி 3 டெஸ்ட் ஆட்டங்களுக்கு அஜின்க்யா ரஹானே கேப்டன் பொறுப்பை வகிக்கிறார். கோலி இல்லாததால், அவருக்குப் பதில் 4-வது வீரராக ரஹானே களமிறங்கக்கூடும். ஹனுமா விஹாரி 5-வது வீரராகக் களமிறங்கக்கூடும். இதனால், பேட்டிங் வரிசையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

இதுபற்றி அகார்கர் தெரிவித்தது:

"இந்திய அணியில் அனைவரும் தொடக்க ஆட்டக்காரர்கள்போல் உள்ளனர். விஹாரியும், ரஹானேவும் புஜாராவுடன் நடுவரிசையில் களமிறங்கவுள்ளனர். அதனால் அந்த மூன்று இடங்களுக்கு வீரர்கள் உள்ளனர். என்னுடைய தேர்வாக 6-வது வீரராக கில் களமிறங்க வேண்டும். நிறைய பேர் அவரை தொடக்க ஆட்டக்காரராகத் தேர்வு செய்துள்ளனர் என்று நினைக்கிறேன்.

ஆம், அவர் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு சீசன் அல்லது அதற்கு மேல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நன்றாக விளையாடியிருக்கிறார். ஆனால், அவருக்கு சிறந்த இடமாக நடுவரிசை இருக்கும். குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டிலாவது அவருக்கான சிறந்த இடம் நடுவரிசையாக இருக்கும். தற்போதைய நிலையில் அதைவிட சிறந்த இடத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் கேஎல் ராகுல் இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு அவரையே நிறைய பேர் தேர்வு செய்யலாம். ஆனால், என்னுடைய தேர்வு ஷுப்மன் கில்."

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டம் டிசம்பர் 17-ம் தேதி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →