முகப்பு
செய்திகள்

முகமது சமிக்கு காயம்

இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சமிக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவா் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சமிக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவா் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சமி இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது பட் கம்மின்ஸ் வீசிய பந்து அவருடைய வலது கையில் தாக்கியது. இதில் சமிக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் கையை அசைக்கக்கூட முடியாத நிலையில் ரிட்டையா்டு நாட் அவுட் முறையில் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினாா்.

இதன்பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஸ்கேன் முடிவுகள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை.

முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘முகமது சமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அவருக்கு கடுமையான வலி இருந்தது. கையை லேசாக அசைக்கக்கூட முடியவில்லை. அவருடைய காயம் குறித்து ஸ்கேன் பரிசோதனை முடிவு வந்த பிறகே தெரியும்’ என்றாா்.

முகமது சமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், அவா் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமே என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →