முகப்பு
செய்திகள்

கரோனாவுக்குப் பலியான சச்சின் டெண்டுல்கரின் நண்பர்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான விஜய் ஷிர்கே, கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

முன்னாள் கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான விஜய் ஷிர்கே, கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மும்பை கிளப் அணிகளில் 80களில் விளையாடியவர் விஜய் ஷிர்கே. 1988-ல் பள்ளி வயதில் சச்சினும் வினோத் காம்பிளியும் இணைந்து உலக சாதனை நிகழ்த்திய பிறகு சன்கிரேஸ் மஃபட்லால் கிளப் இருவருக்கும் ஊக்கத்தொகை வழங்கியது. அந்த கிளப் அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர், விஜய் ஷிர்கே. சச்சின், காம்ப்ளி ஆகிய இருவருக்கும் அவர் நண்பராக இருந்துள்ளார். 

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஷிர்கே, சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். அவருடைய மறைவுக்கு சச்சின், காம்ப்ளி உள்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.   

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனக்கும் சச்சினுக்கும் மாதம் ரூ. 200 ஊக்கத்தொகை வழங்கியது சன்கிரேஸ் மஃபட்லால் கிளப். அந்தத் தொகையை எடுத்து வந்து எங்களிடம் ஷிர்கே வழங்குவார். நாங்கள் அவரை விஜா என அழைப்போம். ஒரு வாரத்துக்கு முன்பு கூட அவரிடம் பேசினேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் காம்ப்ளி.

ட்விட்டரில் சச்சின் கூறியதாவது:

விஜய் ஷிர்கேவை எனக்கு 15 வயது முதல் தெரியும். இருவரும் ஒன்றாகப் பல மணி நேரங்களைக் கழித்துள்ளோம். அந்த நினைவுகள் என்னிடம் எப்போதும் இருக்கும். அவருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →