முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ராபின் ஜாக்மேன் மறைவு

இங்கிலாந்து முன்னாள் வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ராபின் ஜாக்மேன் காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
படம் - ICC Twitter/ ANI Photo
பகிர்:

இங்கிலாந்து முன்னாள் வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ராபின் ஜாக்மேன் காலமானார். அவருக்கு வயது 75.

1981-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 35 வயதில் அறிமுகமான ஜாக்மேன், 4 டெஸ்டுகள், 15 ஒருநாள், 399 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்தியாவில் (சிம்லா) பிறந்து, இங்கிலாந்தில் விளையாடி, தென் ஆப்பிரிக்காவில் பயிற்சியாளராகப் பணியாற்றியவர். ஓய்வுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் வர்ணனையாளராகப் பங்கேற்று கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகமாக அறிமுகமானார். 

2012-ல் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ஜாக்மேன், கிறிஸ்துமஸ் தினத்தன்று காலமானார். அவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளார்கள். 

ஜாக்மேனின் மறைவுக்கு வீரர்களும் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →