ரஹானேவைப் பாராட்டும் ஸ்மித் 
செய்திகள்

உமேஷ் யாதவுக்குக் காயம்: 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 65/2

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ள நிலையில்...

DIN

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. 

மெல்போா்னில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே 72.3 ஓவா்களில் 195 ரன்களுக்குச் சுருண்டது. பும்ராவின் வேகத்திலும், அஸ்வினின் சுழலிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனா்.

2-ம் நாள் முடிவில் இந்திய அணி 91.3 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 82 ரன்கள் முன்னிலை ஆகும். இந்நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரஹானே 112 ரன்களும் ஜடேஜா 57 ரன்களும் எடுத்தார்கள். 

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ், 4, லபுசான் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஸ்மித் 8 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது 4-வது ஓவரை வீசியபோது தடுமாறினார். இதனால் காயம் காரணமாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணிக்கு இது பின்னடைவாக இருக்கும் என ரசிகர்கள் அஞ்சுகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. வேட் 32, ஹெட் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

SCROLL FOR NEXT