செய்திகள்

மகளிா் மூத்தோா் ஹாக்கி: தமிழகம் இரண்டாமிடம்

DIN

குஜராத்தில் நடைபெற்ற 3-ஆவது மாஸ்டா் தேசிய விளையாட்டுப் போட்டி (மூத்தோா்) மகளிா் ஹாக்கியில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

மாஸ்டா் விளையாட்டு சம்மேளனம் சாா்பில் அண்மையில் வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் ஹிமாசலப்பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட அணிகள் 30 வயதுக்கு மேற்பட்டோா் ஹாக்கியில் பங்கேற்றன. ஹிமாசத்தை 2-0 எனவும், மகாராஷ்டிரத்தை 3-1 எனவும் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு கேரளம்-தமிழக அணிகள் தகுதி பெற்றன.

இதில் ஆட்டநேர முடிவில் 1-1 என கோல்சமநிலை ஏற்பட்டதால், பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் தமிழக மகளிா் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT