செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார பந்துவீச்சு: 235 ரன்களுக்குள் ஆட்டமிழந்த நியூஸிலாந்து அணி!

இன்று தனது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து லெவன் அணி, 74.2 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது...

எழில்

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

ஹேமில்டனில் நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விஹாரி 101 ரன்களும் புஜாரா 92 ரன்களும் எடுத்து இந்திய அணியின் கெளரவத்தைக் காப்பாற்றினார்கள். நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள்.

இன்று தனது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து லெவன் அணி, 74.2 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு பேட்ஸ்மானாலும் அரை சதம் எடுக்க முடியாமல் போனது. ஷமி 3 விக்கெட்டுகளும் பும்ரா, உமேஷ் யாதவ், சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 35, மயங்க் அகர்வால் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து: நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

SCROLL FOR NEXT