முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: 4 சிக்ஸர்கள் அடித்து அசத்திய 16 வயது இந்திய வீராங்கனை!

17 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார் ஷஃபாலி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:58 PM
பகிர்:

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.

பெர்த்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியத் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய ஷஃபாலி வர்மா, வழக்கம்போல அதிரடியாக விளையாடி இந்திய ரசிகர்களை மகிழ்வித்தார்.

இதுவரை 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹரியாணாவைச் சேர்ந்த ஷஃபாலி, இன்று 4 சிக்ஸர்கள் அடித்தார். 16 வயதில் துணிச்சலுடன் சிக்ஸர்கள் அடித்ததால் சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. பெண்கள் கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த ஷஃபாலி சரியான நபர் என்று பலரும் அவரைப் பாராட்டியுள்ளார்கள். 

17 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார் ஷஃபாலி.

முழு கட்டுரையைப் படிக்க →