முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்தார் விராட் கோலி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 21 ரன்கள் மட்டும் எடுத்த விராட் கோலி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார்.

Updated On : 26 பிப்ரவரி, 2020 at 4:44 PM
பகிர்:

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 21 ரன்கள் மட்டும் எடுத்த விராட் கோலி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை மீண்டும் அடைந்துள்ளார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித். முதலிடத்தை அவர் எட்டாவது முறையாகக் கைப்பற்றியுள்ளார்.

தரவரிசையில் இந்திய வீரர்கள் ரஹானே 8-ம் இடத்தையும் மயங்க் அகர்வால் 10-வது இடத்தையும் அடைந்துள்ளார்கள். இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், பிப்ரவரி 29 அன்று தொடங்கவுள்ளது.

Advertisement

டெஸ்ட் தரவரிசை: பேட்ஸ்மேன்கள்

1. ஸ்மித்
2. கோலி
3. வில்லியம்சன்
4. லபுஷேன்
5. பாபர் அஸாம் 

டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள்

1. பேட் கம்மின்ஸ்
2. நீல் வாக்னர்
3. ஜேசன் ஹோல்டர்
4. ரபடா
5. ஸ்டார்க்

டெஸ்ட் தரவரிசை: ஆல்ரவுண்டர்கள்

1. ஜேசன் ஹோல்டர்
2. பென் ஸ்டோக்ஸ்
3. ஜடேஜா
4. ஸ்டார்க்
5. அஸ்வின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.