முகப்பு
செய்திகள்

ஹர்பஜன் சிங் போல பந்துவீசிக் காண்பித்த கோலி! (விடியோ)

ஹர்பஜன் எப்படிப் பந்துவீசுவார் என்று கோலி அதேபோல பந்துவீசிக் காண்பித்தார்...

Updated On : 8 ஜனவரி, 2020 at 2:15 PM
பகிர்:

குவாஹாட்டியில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் ஆட்டம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 142/9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. 

இந்நிலையில் பயிற்சியின்போது, ஸ்டார் ஸ்போர்ட்ஸின் வர்ணனையாளராக உள்ள ஹர்பஜன் சிங் இந்திய அணியினருடன் உரையாடினார். அப்போது, ஹர்பஜன் எப்படிப் பந்துவீசுவார் என்று கோலி அதேபோல பந்துவீசிக் காண்பித்தார். இந்த விடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பகிர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.