முகப்பு
செய்திகள்

விவிஎஸ் லக்‌ஷ்மணின் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தோனிக்கு இடமில்லை!

ஆஸ்திரேலியாவில் ஆடவர் டி20 உலகக் கோப்பை அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. 

Updated On : 8 ஜனவரி, 2020 at 2:41 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் ஆடவர் டி20 உலகக் கோப்பை அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி எவ்வாறு அமைய வேண்டும் என்று தனது விருப்பத்தைக் கூறியுள்ளார் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மண். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் நிபுணராக உள்ள லக்‌ஷ்மண், தேர்வு செய்துள்ள அணி இது:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, பும்ரா, சஹால், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே, ஷிவம் டுபே, ஜடேஜா, ஷமி, தீபக் சஹார், புவனேஸ்வர் குமார். 

Advertisement

லக்‌ஷ்மணின் அணியில் தோனிக்கு இடமில்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய அணியில் ஷிகர் தவன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களும் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.