செய்திகள்

தோனியின் இடத்தை என்னால் நிரப்ப முடியாது: பாண்டியா பதில்

என்னால் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது. அந்தக் கோணத்தில் நான் யோசித்ததே இல்லை.

எழில்

இந்திய அணியில் தோனி இனி எப்போது இடம்பெறுவார் என்கிற கேள்வி உள்ளது. ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடாமல் போனால் அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற முடியாது. இதுதான் தற்போதைய நிலைமை.

தோனியின் இடத்தை நிரப்ப உங்களால் முடியுமா என்கிற ஆங்கில ஊடகம் ஒன்று பாண்டியாவிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு, அவர் அளித்த பதில்:

என்னால் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது. அந்தக் கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. அதேசமயம் சவாலுக்கு நான் தயாராக உள்ளேன். என்ன செய்தாலும் அது அணியின் நலனுக்காகத்தான் இருக்கும் என்றார்.

காஃபி வித் கரண் நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைக்கு பாண்டியா கூறியதாவது: கிரிக்கெட் வீரர்களுக்கு அது போன்ற நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் அடுத்து என்ன நடக்கிறது என்று தெரியாது. முடிவுகள் எதுவும் எங்கள் வசமில்லை. அடுத்தவர்கள் எடுத்த முடிவின்படி தான் நாங்கள் செயல்பட்டோம். அதுபோன்ற சூழலில் நீங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT