முகப்பு
செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தோனி விரைவில் ஓய்வு பெற்று விடுவார்: சாஸ்திரி அறிவிப்பு

ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினால் இந்திய அணியில் தோனி இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

Updated On : 9 ஜனவரி, 2020 at 3:29 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினால் இந்திய அணியில் தோனி இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

நான் தோனியிடம் பேசினேன். அதன் விவரம் எங்கள் இருவரிடம் மட்டுமே இருக்கும். தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடித்துக்கொள்வார். மீதமுள்ள டி20 கிரிக்கெட்டில் தான் விளையாடுவார். ஐபிஎல் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார். அவருக்கு அபாரமான ஐபிஎல் அமைந்துவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கும். 

Advertisement

நடுவரிசை வீரர்களுக்கான தேர்வில் அனுபவமும் ஃபார்மும் முக்கியம். 5-6 நிலைகளில் அவர்கள் விளையாடுவார்கள். ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினால் அந்த இடத்துக்கான போட்டியில் தோனியும் இருப்பார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.