செய்திகள்

இன்றைய தேதிக்கு, பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான பகுதி: கிறிஸ் கெயில் சான்றிதழ்!

எழில்

கிரிக்கெட் வீரர்களும் அணிகளும் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ய தயங்கும் வேளையில், பாகிஸ்தான் உலகின் மிகப் பாதுகாப்பான பகுதி என சான்றிதழ் வழங்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்.

வங்கதேச பிரிமீயர் லீக் டி20 போட்டியில் விளையாடி வரும் கெயில் பேட்டியளித்ததாவது:

இன்றைய தேதிக்கு, பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான பகுதி. ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. பிறகு என்ன பிரச்னை? வங்கதேசத்திலும் பாதுகாப்பு நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். 

2009-ல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்ட், தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. மைதானத்துக்கு இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. சமீபகாலமாகத்தான் டி20, ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அங்கு டெஸ்ட்  ஆட்டம் நடைபெற்றுள்ளது. ராவல்பிண்டியிலும் கராச்சியிலும் பாகிஸ்தான் - இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி விளையாடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT