செய்திகள்

ரஞ்சி போட்டியில் இஷாந்த் சர்மாவுக்குக் காயம்: நியூஸிலாந்துக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படுமா?

தில்லியில் நடைபெற்ற விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

எழில்

தில்லியில் நடைபெற்ற விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இன்று, விதர்பாவின் 2-வது இன்னிங்ஸில், 5-வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அப்போது, கள நடுவரிடம் எல்பிடபிள்யூ கோரியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்தில் இஷாந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்றும் அதற்கு முன்பு பயிற்சி ஆட்டம் பிப்ரவரி 14 அன்றும் தொடங்குகின்றன. காயம் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்க சிக்கல் எதுவும் ஏற்படுமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

விதர்பாவுக்கு எதிரான ஆட்டமே இந்த சீஸனில் இஷாந்த் சர்மா விளையாடும் கடைசி ரஞ்சி ஆட்டம். தற்போது ஏற்பட்டுள்ள காயத்துக்குக் கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால் பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமிக்கு அவர் செல்லவேண்டியிருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT