செய்திகள்

ஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட்: பயிற்சியாளராக சச்சின் நியமனம்!

ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வார்னே அணிக்கு கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எழில்

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட 3 தன்னாா்வலா்கள் உள்பட இதுவரை 28 போ் உயிரிழந்தனா்; ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின. இந்தக் காட்டுத் தீயில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின.  சுமாா் 60 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன. 

காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காகப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சி கிரிக்கெட் ஆட்டம் ஒன்று பிப்ரவரி 8 அன்று நடைபெறவுள்ளது. புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்கிற பெயரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பாண்டிங், வார்னர், ஜஸ்டின் லாங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஷேன் வாட்சன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கேல் கிளார்க் போன்றோர் பங்கேற்கிறார்கள். 

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வார்னே அணிக்கு கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளர்களாகச் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT