செய்திகள்

நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள், பழி வாங்க முடியாது: விராட் கோலி

எழில்

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக நியூஸிலாந்து அணியைப் பழிவாங்கவேண்டும் என நினைக்கவில்லை. நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள். அந்த எண்ணமே தோன்றாது. 

ஆனால், போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவோம். சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நியூஸிலாந்து வீரர்கள் சிறந்த உதாரணம். அதனால் தான் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு அவர்கள் தகுதியடைந்தபோது மகிழ்ச்சி அடைந்தோம் என்று கூறினார்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT