முகப்பு
செய்திகள்

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார் சானியா மிர்சா!

கடந்த வாரம் ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியா மிர்சா...

Updated On : 23 ஜனவரி, 2020 at 12:50 PM
பகிர்:

கடந்த வாரம் ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியா மிர்சா, காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா மிர்சா - நாடியா இணை, சீனாவின் ஸின்யுன் ஹான் - லின் ஷு இணையை எதிர்கொண்டது. முதல் செட்டில் இந்திய இணை 2-6 எனத் தோற்று 2-வது செட்டில் 0-1 எனப் பின்தங்கியிருந்தபோது சானியா மிர்சாவுக்குக் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆட்டத்திலிருந்து விலகுவதாக சானியா அறிவித்தார். இதையடுத்து முதல் சுற்று ஆட்டத்தில் சானியா - நாடியா இணை தோல்வியடைந்தது.

இதுமட்டுமல்லாமல் சானியாவின் காயம் காரணமாக கலப்பு இரட்டையர் போட்டியிலிருந்தும் சானியா மிர்சா - ரோஹன் போபன்னா இணை வெளியேறியது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.