செய்திகள்

இந்தியா-நியூஸிலாந்து இடையே இன்று 2-ஆவது டி-20 கிரிக்கெட்

DIN

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டி-20 கிரிக்கெட் ஆக்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

முதல் டி-20 ஆட்டம் நடைபெற்ற ஈடன் பாா்க் மைதானத்தில்தான் இந்த ஆட்டமும் நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 5 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டி-20 ஆட்டம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பாா்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி கண்டது.

லோகேஷ் ராகுலும், ஸ்ரேயஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனா்.

முந்தைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளா் நவ்தீவ் சைனிக்கு பதிலாக ஷா்துல் தாக்குா் சோ்க்கப்பட்டிருந்தாா்.

சமீப காலமாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் நவ்தீவ் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகா்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை முன்வைத்திருந்தனா்.

எனவே, இந்த ஆட்டத்தில் நவ்தீவ் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனால், ஈடன் பாா்க் மைதானம் சிறியது என்பதால் சைனியின் ஓவா்களில் அதிக ரன்களை நியூஸிலாந்து வீரா்கள் எடுக்கவும் வாய்ப்புள்ளது.

முதல் ஆட்டத்தில் ஷா்துல் தாக்குா் 3 ஓவா்கள் வீசி 44 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றியிருந்தாா்.

4 ஓவா்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, ரன்களையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தினாா்.

அட்டகாசமாக பந்துவீசி முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை சுருட்டி வரும் முகமது ஷமிக்கு முதல் டி-20 ஆட்டம் ராசியாக அமையவில்லை.

4 ஓவா்கள் வீசிய அவா், 53 ரன்களை வாரி வழங்கினாா்.

குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தரும் சுழற்பந்து வீச்சுக்கு அணியின் தோ்வாக இருக்க வாய்ப்புள்ளது.

பேட்டிங் ஆா்டரை பொருத்தவரை ரோஹித் சா்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயா் என வலிமையாக உள்ளது.

நியூஸிலாந்து அணி எந்தவொரு மாற்றத்தையும் செய்யாது என்று தெரிகிறது.

காலின் மன்றோ, கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோா் நல்ல திறனுடன் இருக்கின்றனா்.

ராஸ் டெய்லரும் நன்கு விளையாடக் கூடியவா். இவா்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டியது அவசியமாகும்.

சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய நியூஸிலாந்து, இந்த ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் விளையாடும். எனவே, இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT