முகப்பு
செய்திகள்

கார் மோதி முதியவர் மரணம்: இலங்கை கிரிகெட் வீரர் கைது!

தனது கார் மோதி முதியவர் ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் பிரபல இலங்கை கிரிகெட் வீரர் குசால் மென்டிஸ் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
தனது கார் மோதி முதியவர் ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் பிரபல இலங்கை கிரிகெட் வீரர் குசால் மென்டிஸ் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பகிர்:

கொழும்பு: தனது கார் மோதி முதியவர் ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் பிரபல இலங்கை கிரிகெட் வீரர் குசால் மென்டிஸ் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரபல இ.எஸ்.பி.என்-க்ரிக் இன்போ  இணைய தளத்தில் வெளியியிடப்பட்டுள்ள செய்தியாவது

கொழும்புவின் தென்பகுதியில் உள்ள பனடுரா பகுதியில் ஞாயிறு அதிகாலை ஐந்து மணியளவில்,  கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ் ஓட்டி வந்த காரானது, சைக்கிளில் வந்த 64 வயது நபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தற்போது வரும் 48 மணி நேரத்திற்குள் குசால் மென்டிஸ் பனடுரா நகர மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார். தற்போது வரை நடைபெற்றுள்ள விசாரணை முடிவில் குசால் மென்டிஸ் அல்லது அந்த மரணமடைந்த முதியவர்  யாரேனும் சம்பவம் நடந்த போது மது அருந்தியிருந்தார்களா என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை.

விபத்து குறித்த தகவலை இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.