செய்திகள்

விராட் கோலி மீது இரட்டை ஆதாயம் தொடர்பான புகார்!

DIN

இந்திய கேப்டன் கோலி மீது இரட்டை ஆதாயம் தொடர்பான புகார் எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான சஞ்சீவ் குப்தா, பிசிசிஐயின் நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயினிடம் கோலியின் இரட்டை ஆதாயம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். பிசிசிஐ தலைவர் கங்குலி, தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். புகாரில் அவர் கூறியதாவது:

கார்னர்ஸ்டோன் வென்ச்சர்ஸ் நிறுவனம் மற்றும் விராட் கோலி ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர்களில் ஒருவராக இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளார். இந்நிறுவனங்களின் சக இயக்குநர்கள் இருவர் - கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திலும் இயக்குநர்களாக உள்ளார்கள். இந்த நிறுவனம் சில இந்திய வீரர்களின் விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகிக்கிறது. இதனால் பிசிசிஐயின் விதியை கோலி மீறியுள்ளார். எனவே இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சஞ்சீவ் குப்தா புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று டி.கே. ஜெயின் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT