செய்திகள்

ஆண்டர்சன்.. பிராட்.. பிராத்வைட்..: இவர்களை இணைப்பது 500-வது விக்கெட்..

ஆண்டர்சன் மற்றும் பிராட்டின் 500-வது டெஸ்ட் விக்கெட் பிராத்வைட்.

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சு ஜாம்பவான்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட். இவர்கள் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஆண்டர்சன் கடந்த 2017-இல் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில், ஸ்டுவர்ட் பிராட் இந்த மைல்கல்லை இன்று எட்டினார்.

இருவரும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள், இருவரும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள் என்ற ஒற்றுமைகளைத் தாண்டி மற்றுமொரு புள்ளியிலும் இருவரும் இணைகின்றனர். இந்தப் புள்ளியில் இவர்களை இணைக்கும் வீரர் மேற்கிந்தியத் தீவுகளின் கிரெய்க் பிராத்வைட்.

ஆண்டர்சன் கடந்த 2017-இல் லார்ட்ஸ் மைதானத்தில் 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். அவருடைய 500-வது டெஸ்ட் விக்கெட் பிராத்வைட். ஸ்டுவர்ட் பிராட்டின் 500-வது டெஸ்ட் விக்கெட்டும் பிராத்வைட்தான். இருவருடைய 500-வது விக்கெட்டாக ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, பிராத்வைட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 

வரும் காலதத்தில் ஆண்டர்சன், பிராட் சாதனைகளைப் பற்றி பேசும் தருணங்களில் பிராத்வைட்டுக்கும் ஒரு இடம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT