செய்திகள்

இலங்கை டி20 லீக் போட்டி ஆகஸ்ட் 28-ல் தொடக்கம்

இப்போட்டியில் பங்கேற்க 70 சர்வதேச வீரர்களும் 10 பிரபல பயிற்சியாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி ஆகஸ்ட் 28 முதல் தொடங்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியை நடத்துவதற்குச் சம்மதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை இப்போட்டி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நான்கு மைதானங்களில் 23 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கொழும்பு, கண்டி, கேலே, டம்புல்லா, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்குபெறவுள்ளன. இப்போட்டியில் பங்கேற்க 70 சர்வதேச வீரர்களும் 10 பிரபல பயிற்சியாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் ஆறு வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆட்டத்தின்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் அனுமதிக்கப்படுவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT