செய்திகள்

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி

DIN
2022 ஏஎஃப்சி மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதியளித்துள்ளது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு.
அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்துக்கு ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் இதுபற்றிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் மூலம் இந்தியாவில் மகளிர் கால்பந்து வளர்ச்சி பெறும் என அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல் கூறியுள்ளார்.
2021-ம் ஆண்டு ஃபிஃபா யு-17 மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 முதல் மார்ச் 7 வரை இப்போட்டி நடைபெறுகிறது. 2017-ல் ஃபிஃபா யு-17 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்தியது. மேலும் 2016-ல் ஏஎஃப்சி யு-16 சாம்பியன்ஷிப் போட்டியையும் இந்தியா நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT