செய்திகள்

ஊரடங்கு காலத்தில் இன்ஸ்டகிராம் மூலமாக ரூ. 3.60 கோடி வருமானம் ஈட்டிய கோலி!

DIN
கரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பலரும் வேலையின்றி அவதிப்பட்டு வருகிற நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் இன்ஸ்டகிராம் மூலமாக ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.
மார்ச் 12 முதல் மே 14 வரை இன்ஸ்டகிராம் மூலமாக அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை அட்டெய்ன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த இக்காலக்கட்டத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 17.19 கோடி சம்பாதித்து விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
6-ம் இடத்தில் உள்ள கோலி, இன்ஸ்டகிராம் தளத்தில் நிறுவனங்கள் பற்றிய விளம்பரப் பதிவுகளின் மூலம் ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.  முதல் 10 வீரர்களில் இடம்பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர் கோலி மட்டுமே. ஊரடங்கு காலக்கட்டத்தில் இன்ஸ்டகிராமில் 3 விளம்பரப் பதிவுகள் மட்டுமே வெளியிட்டுள்ளார் கோலி. அந்த ஒவ்வொரு விளம்பரப் பதிவுக்கும் அவருக்குக் கிட்டத்தட்ட ரூ. 1.21 கோடி கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT