செய்திகள்

மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று தோனி சாதனை செய்த நாள் இன்று!

DIN

2007-ல் டி20 உலகக் கோப்பை

2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை

2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை

2013, ஜூன் 23 அன்று சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்கிற பெருமையை அடைந்தார் தோனி.

பிர்மிங்ஹாமில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்று மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனான ஜடேஜாவும் தொடர் நாயகனாக ஷிகர் தவனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன்மூலம் டி20, ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்கிற பெருமையை தோனி அடைந்தார். 

தோனி சாதனை நிகழ்த்தி ஏழு வருடங்கள் ஆனதையொட்டி ஐசிசி ட்வீட் வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் தோனிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT