முகப்பு
செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் 16 வயது ஷஃபாலி வர்மா

மகளிர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் 16 வயது ஷஃபாலி வர்மா, ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

Updated On : 4 மார்ச், 2020 at 10:54 AM
பகிர்:

மகளிர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் 16 வயது ஷஃபாலி வர்மா, ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸ், அக்டோபர் 2018 முதல் மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் அவரைப் பின்னுக்குத் தள்ளி, 19 இடங்கள் முன்னேறி, ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் ஷஃபாலி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஷஃபாலி 161 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.

இதற்கு முன்பு மிதாலி ராஜ் டி20 தரவரிசையில் இடம்பெற்றார். அதன்பிறகு ஷஃபாலிக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.