செய்திகள்

ரஞ்சி இறுதிச்சுற்று: முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்துள்ள செளராஷ்டிரம்

முதல் இன்னிங்ஸில் அடிப்படையில் செளராஷ்டிரம் அணி முன்னிலை பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

எழில்

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் பெங்கால் - செளராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற செளராஷ்டிரம் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆடுகளம் ரன்களைச் சேர்க்க கடினமாக இருந்ததால் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிதானமாகவும் பக்குவமாகவும் விளையாடினார்கள். 31 வயது அர்பித் வசவதா106 ரன்களும் புஜாரா 66 ரன்களும் எடுத்தார்கள். பரோட், வி.எம். ஜடேஜா ஆகிய இருவரும் அரை சதம் எடுத்தார்கள். 

மூன்றாவது நாளான இன்று, முதல் இன்னிங்ஸில் 171.5 ஓவர்கள் வரைக்கும் விளையாடி 425 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது செளராஷ்டிரம் அணி. பெங்கால் அணியில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் ஷபாஸ் அஹ்மது 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்த இறுதிச்சுற்றில் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் செளராஷ்டிரம் அணி முன்னிலை பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT