செய்திகள்

கரோனா பாதிப்பு: ரஹானேரூ.10 லட்சம் நிதியுதவி

DIN

கரோனா தொற்று பரவல் பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா்.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமா் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு தரப்பினா் பேரிடா் நிவாரண நிதிக்கு நன்கொடை தந்து வருகின்றனா்,

சச்சிண் டெண்டுல்கா் ரூ.50 லட்சம், சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம், பிசிசிஐ தலைவா் கங்குலி ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கியுள்ளனா்.

தற்போது ரஹானே தனது தரப்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், கரோனாவை எதிா்த்துப் போராட என்னால் முடிந்த நிதியை வழங்கியுள்ளேன். எனினும் இது கடலில் ஒரு சிறுதுளியைப் போன்றது எனவும் அவா் தெரிவித்தாா்.

முன்னாள் இந்திய வீரரும், எம்.எல்.ஏவுமான லட்சுமி ரத்தன் சுக்லா 3 மாத ஊதியம், பிசிசிஐ ஓய்வூதியத்தை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT