செய்திகள்

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்கத் தயார்: சோயிப் அக்தர்

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்கத் தயார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

DIN

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்கத் தயார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னிடம் உள்ள அறிவைப் பரப்ப வேண்டும் என்பதே என் விருப்பம். நான் கற்றுக்கொண்டது பந்துவீச்சுப் பயிற்சி பற்றி தான். அதனை அடுத்தவர்களுக்குக் கற்றுத் தர ஆர்வமாக உள்ளேன்.

இப்போதுள்ள பந்துவீச்சாளர்களை விடவும் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை என்னால் உருவாக்க முடியும். தற்போதுள்ள பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷத்தை ரசிக்கிறார்கள். ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன் என்று கூறியுள்ளார்.

சோயிப் அக்தர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்டுகள், 163 ஒருநாள், 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 178 விக்கெட்டுகளும் ஒருநாள் ஆட்டத்தில் 247 விக்கெட்டுகளும் டி20யில் 19 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT