ஜெர்மனியில் மாட்டிக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த்: மகன் கவலை
கரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு திரும்ப முடியாமல் உள்ள செஸ் வீரா் ஆனந்த் ஜொ்மனியில் உள்ளதால்..
செய்திகள்ஜெர்மனியில் மாட்டிக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த்: மகன் கவலை
கரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு திரும்ப முடியாமல் உள்ள செஸ் வீரா் ஆனந்த் ஜொ்மனியில் உள்ளதால்..
கரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு திரும்ப முடியாமல் உள்ள செஸ் வீரா் ஆனந்த் ஜொ்மனியில் உள்ளதால் அவருடைய குடும்பத்தினர் கவலையில் உள்ளார்கள்.
5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பண்டஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜெர்மனிக்குச் சென்றார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டிகள் ரத்தாகியுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை. இதனால் ஜொ்மனியின் பிராங்ஃபா்ட் நகரில் தங்கியுள்ளாா்.
இதுபற்றி ஆனந்தின் மனைவி அருணா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிராங்ஃபா்ட்டில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் ஆனந்த் தொடர்ந்து பேசி வருகிறார். ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவது குறித்து தற்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை. ஜெர்மனியில் தான் ஆனந்த் உள்ளார் என்பதைத் தூதரகம் அறிந்து வைத்துள்ளது. ஒவ்வொருவராகத்தான் இந்தியாவுக்குத் திரும்ப முடியும். உங்களுக்கு எப்போது வாய்ப்பு வருமோ அப்போதுதான் ஊர் திரும்ப முடியும். விரைவில் இந்தியாவுக்கு ஆனந்த் திரும்புவார் எனக் காத்திருக்கிறோம்.
குடும்பத்தில் அவர் இல்லாமல் கடினமான சூழல் நிலவுகிறது. தனது அப்பா வீட்டில் நீண்ட நாள்களாக இல்லாததை மகன் அகிலால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் எப்போது வீட்டில் இருந்தாலும் மகனுடன் அதிக நேரம் செலவிடுவார் என்று கூறியுள்ளார்.