முகப்பு
செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு இரு வீராங்கனைகளின் பெயர்களைப் பரிந்துரை செய்யவுள்ள பிசிசிஐ

வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜா, பூனம் யாதவ் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

கடந்த வருடம் மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இருவரும் சிறப்பாக விளையாடியதால் அவர்களுடைய பெயர்களை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளது. ஜூன் 3-ம் தேதிக்குள் விளையாட்டுச் சங்கங்கள் தங்களுடைய பரிந்துரையை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →