செய்திகள்

கோலியால் சச்சின் சாதனைகளை உடைக்க முடியுமா?: வாசிம் அக்ரம் பதில்

DIN

200 டெஸ்டுகள், 100 சர்வதேச சதங்கள் போன்ற சச்சினின் சாதனைகளை விராட் கோலியால் உடைக்க முடியுமா? முக்கியமாக சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலியால் தாண்ட முடியும் என்று பலர் எண்ணுகிறார்கள்.

சச்சின் - 200 டெஸ்டுகள், 15921 ரன்கள், 51 சதங்கள்
கோலி - 86 டெஸ்டுகள், 7240 ரன்கள், 27 சதங்கள்

சச்சின் - 463 ஒருநாள் ஆட்டங்கள், 18426 ரன்கள், 49 சதங்கள்
கோலி - 248 ஒருநாள் ஆட்டங்கள், 11867 ரன்கள் 43 சதங்கள்

ஆனால், சச்சின் சாதனைகளை விராட் கோலி உடைப்பார் என்கிற கருத்தை மறுக்கிறார் வாசிம் அக்ரம். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதை நேரடியாகக் கூறுபவன் நான். சச்சின், கோலி இருவரையும் என்னால் ஒப்பிட்டுப் பேச முடியாது. விராட் கோலி இன்னும் பல முன்னேற்றங்கள் அடைந்து பல சாதனைகளை உடைப்பார். ஆனால், சச்சினின் சாதனைகளை கோலியால் உடைக்க முடியுமா? எனக்குச் சந்தேகமாக உள்ளது. சச்சின் வசம் ஏராளமான சாதனைகள் உள்ளன.

இன்றைய தலைமுறை வீரர்களில் விராட் கோலி மகத்தானவர். பேட்ஸ்மேனாகவும் தனிப்பட்ட அளவிலும் ஆக்ரோஷக் குணம் கொண்டவர் கோலி. ஆனால் சச்சின் சாதுவானவர். அதேசமயம் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். இருவருக்கும் வெவ்வேறு உடல்மொழி உள்ளது.

சச்சினிடம் வாக்குவாதம் செய்தால் இன்னும் அதிக மன உறுதி கொள்வார். ஆனால் கோலியிடம் ஒரு பந்துவீச்சாளர் வாக்குவாதம் செய்தால் அவர் தனது பொறுமையை இழப்பார். எப்போதும் பேட்ஸ்மேன் கோபமடைந்தால் பந்துகளை அடித்து நொறுக்க விரும்புவார். இதுபோன்ற தருணங்களில் தான் தவறு செய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டு விக்கெட்டை இழக்க நேரிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

SCROLL FOR NEXT