செய்திகள்

நீங்கள் அடித்தால் மட்டும் பந்து சிக்ஸருக்குப் பறப்பது எப்படி?: தோனியிடம் ரகசியம் கேட்டறிந்த வங்கதேச வீரர்

DIN

சிக்ஸர் அடிக்கும் ரகசியத்தை வங்கதேச வீரர் சபிர் ரஹ்மானிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் எம்.எஸ். தோனி.

ஃபேஸ்புக் உரையாடல் ஒன்றில் தோனி பற்றி சபிர் ரஹ்மான் கூறியதாவது:

பெங்களூரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் என்னை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் தோனி. கடந்த வருடம் இங்கிலாந்தில் மீண்டும் என்னை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் அவர் ஸ்டம்பிங் செய்யும் முன்பே நான் உள்ளே வந்துவிட்டேன். இன்று கிடையாது என்று அவரிடம் சொன்னேன்.

உங்களுடைய பேட்டில் உள்ள ரகசியம் என்ன அவரிடம் ஒருமுறை கேட்டேன். நாங்கள் சிக்ஸர் அடிக்க மிகவும் சிரமப்படுகிறோம். ஆனால் நீங்கள் அடித்தால் மட்டும் பந்து சிக்ஸருக்குப் பறப்பது எப்படி என்று அதற்கான காரணத்தைக் கேட்டேன். எல்லாம் தன்னம்பிக்கையில் தான் உள்ளது என்று தோனி பதில் அளித்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட அவருடைய பேட்டைக் கேட்டேன். நான் பேட்டைத் தருகிறேன். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அதைப் பயன்படுத்தக் கூடாது, இதர அணிகளுக்கு எதிராக விளையாடிக் கொள்ளலாம் என தோனி சொன்னார் என்று சபிர் ரஹ்மான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT