முகப்பு
செய்திகள்

பிசிசிஐ வழங்கிய அரை மில்லியன் டாலர் எங்கே?: மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு மைக்கேல் ஹோல்டிங் கேள்வி!

முன்னாள் வீரர்களுக்காக பிசிசிஐயால் அளிக்கப்பட்ட தொகையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

மே.இ. தீவுகள் அணியின் முன்னாள் வீரர்களுக்காக பிசிசிஐயால் அளிக்கப்பட்ட தொகையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

2014-ல் மே.இ. தீவுகள் அணியின் முன்னாள் வீரர்களின் நலனுக்காக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு அரை மில்லியன் டாலர் ($500,000, இன்றைய மதிப்பு - ரூ. 3.78 கோடி) தொகையை பிசிசிஐ வழங்கியது. நான் ஒரு முன்னாள் வீரர். அதனால் அந்தப் பணம் எனக்கு வேண்டும் எனக் கேட்கவில்லை.

ஆனால் அந்தப் பணம் பற்றி கேள்வியேபடாத பல முன்னாள் வீரர்களை எனக்குத் தெரியும். ஒருவேளை முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கிய தொகையை மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் அளித்திருந்தால் அதைப் பற்றி பயங்கரமாக விளம்பரம் செய்திருப்பார்கள். எங்கே போனது அந்த அரை மில்லியன் டாலர்? இதுபற்றி என்னுடைய அடுத்த பேட்டியில் கூடுதல் விவரங்களை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →