முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள இந்திய அணியின் புதிய வியூகம்

ஆஸ்திரேலியாவில் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள இந்திய அணி புதிய வியூகத்தைச் செயல்படுத்தி வருகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள இந்திய அணி புதிய வியூகத்தைச் செயல்படுத்தி வருகிறது. 

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

துபையிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு இந்திய அணி சென்றுள்ளது. சிட்னி நகரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிட்னி ஒலிம்பிக் பார்க் ஏரியா பகுதியில் உள்ள புல்மேன் விடுதியில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அடுத்த 14 நாள்களுக்கு இந்திய அணியினர் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இந்தக் காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் இந்திய அணியினர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானவை என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களை பவுன்சர் பந்துகளால் வீழ்த்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இதனை எதிர்கொள்ள இந்திய அணி புதிய வியூகத்தைச் செயல்படுத்தி வருகிறது.

பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள விடியோவில் பந்துவீச்சாளர் அஸ்வின், பாட்மிண்டன் ராக்கெட்டைக் கொண்டு டென்னிஸ் பந்துகளை பேட்ஸ்மேன்களின் முகத்துக்கு நேராக அடிக்கிறார். பவுன்சர் பந்துபோல கழுத்துக்கு மேலே வரும் டென்னிஸ் பந்துகளை பேட்ஸ்மேன்கள் அடித்து பயிற்சி பெறும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய வியூகம் எந்தளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பலனளிக்கும் என்பது டெஸ்ட் தொடரில் தெரிய வரும். 

முழு கட்டுரையைப் படிக்க →