முகப்பு
செய்திகள்

பெங்கால் கிரிக்கெட் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா

​பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 18 நவம்பர், 2020 at 10:01 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM


பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தனிமையில் இருக்கவுள்ளார்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் பெங்கால் டி20 சேலஞ்ச் தொடர் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் அவர் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது. 

Advertisement

இதுபற்றி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலர் தேபபிரதா தாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. எனினும், அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் தற்போது தனிமையில் உள்ளார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்க மருத்துவக் குழுவின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.