செய்திகள்

சூர்யகுமார் யாதவை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்: பிரையன் லாரா

ஐபிஎல் போட்டியில் நன்கு விளையாடிய சூர்யகுமார் யாதவை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்...

DIN

ஐபிஎல் போட்டியில் நன்கு விளையாடிய சூர்யகுமார் யாதவை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என முன்னாள் வீரர் லாரா கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி 480 ரன்கள் எடுத்தார். எனினும் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய டி20 அணியில் அவர் இடம்பெறவில்லை. இதனால் தேர்வுக்குழுவினரைப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா இதுபற்றி கூறியதாவது:

சூர்யகுமார் யாதவ் அருமையான வீரர். ரன்கள் நிறைய எடுக்கும் வீரர்களை மட்டும் நான் பார்க்க மாட்டேன். அவர்களுடைய ஆட்டத்தின் தொழில்நுட்பம், அழுத்தமான தருணங்களில் வெளிப்படுத்தும் திறமை, எந்த நிலையில் விளையாடுகிறார் போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது மும்பை அணிக்காக அருமையாகப் பங்களித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். தொடக்க வீரர்களைத் தவிர 3-ம் நிலையில் விளையாடும் வீரரே உங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன். அவரைத் தான் ஓர் அணி அதிகம் நம்பும். மும்பை அணிக்கு அப்படித்தான் உள்ளார் சூர்யகுமார் யாதவ். இதனால் இந்திய அணியில் ஏன் அவர் இடம்பெற்றிருக்கக் கூடாது எனக் கேட்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT