பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் நடால் - ஜோகோவிச்!
இந்த வருட பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பிரபல வீரர்கள் நடாலும் ஜோகோவிச்சும் மோதுகிறார்கள்.
இந்த வருட பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பிரபல வீரர்கள் நடாலும் ஜோகோவிச்சும் மோதுகிறார்கள்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது.
உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச் தனது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரா் ஸ்டெஃபானோ சிட்சிபாஸை எதிா்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-3, 6-2, 5-7, 4-6 என வெற்றி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.
ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது இது 5-வது முறையாகும். இந்த சீசனில் அவா் பட்டம் வென்றால் பிரெஞ்சு ஓபனில் அது அவரது 2-வது பட்டமாகவும், ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 18-வது பட்டமாகவும் இருக்கும்.
அரையிறுதிச் சுற்றில் டியகோவுடன் மோதினார் நடால். இதில் 6-3, 6-3, 7-6 (0) என நேர் செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் போட்டியில் இதுவரை விளையாடிய 101 ஆட்டங்களில் 99-ல் வெற்றியடைந்துள்ளார் நடால். அரையிறுதி, இறுதிச்சுற்று ஆட்டங்களில் 25 முறை விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். இறுதிச்சுற்றில் 12 முறை பங்கேற்று அனைத்து ஆட்டங்களில் வெற்றி கண்டு பட்டங்களை நடால் வென்றுள்ளார். இதனால் ஞாயிறு அன்று ஜோகோவிச்சுக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது.