முகப்பு
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி: ஹைலைட்ஸ் விடியோ

டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
மிட்செல் மார்ஷ்
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. எனினும் டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனில் நடைபெற்றுள்ளன. ஒருநாள் தொடர் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. 2-வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனினும் டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றுள்ளது.

ஒருநாள் தொடர் செப்டம்பர் 11 முதல் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.