செய்திகள்

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் சிஎஸ்கே வீரர் தீபக் சஹார்

DIN

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், அணியினருடன் இணைந்துள்ளார். 

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த இரு வீரர்கள் தவிர மற்ற சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினார்கள். 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், குணமடைந்துள்ளார். இதையடுத்து அணியினருடன் அவர் இணைந்துள்ளார். சில பரிசோதனைகளுக்குப் பிறகு சஹார் பயிற்சியைத் தொடங்கவுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு சிஎஸ்கே வீரர் ருதுராஜ், இன்னமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார். ருதுராஜ் செப்டம்பர் 12-க்குப் பிறகு பயிற்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT