செய்திகள்

டோக்கியோ ஓலிம்பிக்: வட கொரியா பங்கேற்கவில்லை

DIN

கரோனா சூழல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

உலக அளவிலான கரோனா பாதிப்பிலிருந்து தங்களது விளையாட்டு வீரா், வீராங்கனைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தங்களிடம் அதிகாரப்பூா்வமாக வட கொரியா இன்னும் தங்களிடம் உறுதிப்படுத்தவில்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. வட கொரியா- தென் கொரியா இடையே சமூகமற்ற உறவு உள்ளபோதிலும், கடந்த 2018-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 22 போட்டியாளா்களையும், அரசு அதிகாரிகளையும், ஊடகத்தினரையும் வட கொரியா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT