முகப்பு
செய்திகள்

ரோஹித் சர்மா அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் இலக்கு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

14-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

டி காக் 3 ரன்களில் வெளியேற மற்றொரு புறம் ரோஹித் நிலைத்துநின்று ஆடினார். சிறப்பாக விளையாடிய அவர் 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோரைத் தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை.

27 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பொல்லார்ட் 12 பந்துகளில் தன் பங்கிற்கு 16 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

முழு கட்டுரையைப் படிக்க →