கிரிக்கெட் வீரர் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் மீண்டும் சேர்க்கப்பட்டது.
ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் அதிக பிந்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுவது வழக்கம். அதுபோல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்குக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. இது சர்ச்சையைக் கிளப்பியது.
இதையும் படிக்க | தோனியின் ட்விட்டரில் ப்ளூ டிக் நீக்கம்: காரணம் என்ன?
இதுகுறித்து விளக்கமளித்த டிவிட்டர் நிறுவனம் தோனியின் டிவிட்டர் கணக்கானது நீண்டநாள் பயன்பாட்டில் இல்லாததால் ப்ளூ டிக் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தோனியின் டிவிட்டர் கணக்கில் மீண்டும் ப்ளூ டிக் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நன்றி, வணக்கம்: விலகுகிறார் இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளர்
டிவிட்டர் சரிபார்ப்பு கொள்கையின்படி டிவிட்டர் கணக்கு செயலற்றதாகவோ அல்லது பயன்படுத்தப்படாமலலோ இருந்தால் தானாகவே ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.