செய்திகள்

ரூட் 170*: முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து

DIN


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ஜோ ரூட்டின் அபார சதத்தால் அந்த அணி 300-ஐத் தாண்டி 3-வது நாள் தேநீர் இடைவேளையில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது.

ரூட் 132 ரன்களுடனும், மொயீன் அலி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 150 ரன்களைத் தாண்டினார். ஆனால், மொயீன் அலியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 27 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாம் கரன் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்திடம் வீழ்ந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆலி ராபின்சனும் 6 ரன்களுக்கு முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மார்க் வுட் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஒத்துழைப்பு தர ரூட் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இதன்மூலம், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே வுட் ரன் முறையில் ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கடைசி பேட்ஸ்மேனாக ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கினார். 

கடைசி விக்கெட் என்பதால் ரூட் அதிரடிக்கு மாற முயற்சித்துள்ளார்.

சற்று முன்பு வரை இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ரன்கள் குவித்து 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ரூட் 170 ரன்களுடனும், ஆண்டர்சன் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT