செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் சவால் அளிக்கும் அணி: ஆச்சர்யப்படுத்தும் நியூசி. பிரபலத்தின் கணிப்பு

அருமையான அணி. பழைய தோல்விகளை விடுங்கள், டி20 உலகக் கோப்பைப் போட்டியில்...

DIN

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்க்லிஷ் புதிதாகத் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம். அவர் கூறியதாவது:

அருமையான அணி. பழைய தோல்விகளை விடுங்கள், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சவால் அளிக்கும் எதிரணியாக இருக்கும். ஜோஷ் இங்க்லிஷ் திறமையுள்ள வீரர் என்று கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. மேலும் சமீபத்தில் விளையாடிய 5 டி20 தொடர்களிலும் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணியைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் மெக்குல்லம். 

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், அகர், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஸாம்பா, ஹேஸில்வுட், ஸ்டாய்னிஸ், ஸ்வப்சன், ஜோஷ் இங்லிஷ். 

மாற்று வீரர்கள்: டேன் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT